தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடைபயிற்சி சென்றவர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு - ammk

தேனி: அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

tamilselvan

By

Published : Apr 1, 2019, 4:43 PM IST

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று அமமுக கட்சியின் சார்பாக தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை (தனி) தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் கதிர்காமு ஆகிய இருவரும் இணைந்து பெரியகுளத்தில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details