நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனை விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சி பொறுப்புகளில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கம் - டிடிவி தினகரன் - thangatamilselvan
தேனி: கட்சி கட்டுபாடுகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததால், அமமுகவில் வகித்த பொறுப்புகளில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்பட்டதையடுத்து கம்பத்தில் உள்ள அவரது அலுவலகம் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனையடுத்து மதுரை, தேனி மாவட்ட அமமுக ஒன்றிய, நகர கழக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் பேசியதால், அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர், தேனி மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில் கம்பத்தில் செயல்பட்டு வந்த தங்க தமிழ்செல்வனின் அலுவலகம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்களை தொடர்பு தங்க தமிழ்செல்வன் குறித்து கேட்டபோது, தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.