தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மகன் வெற்றிக்காக ஓட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் கொடுக்க ஓபிஎஸ் தயார்' - தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு! - admk

தேனி: "மக்களிடம் ஊழல் செய்த பணம் ரூ.1லட்சம் கோடி வரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் உள்ளது என்றும், மகனின் தேர்தல் வெற்றிக்காக ஓட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் தருவதற்கு தயாராக உள்ளார்" என்று தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டியுள்ளார்.

தங்க தமிழ்செல்வன் பரப்புரை

By

Published : Mar 30, 2019, 5:22 PM IST

தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் கதிர்காமு போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் தங்களது தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினர்.தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், திறந்த ஜீப்பில் நின்றபடி வேட்பாளர்கள் இருவரும் அப்பகுதி பொதுமக்களிடம் பரிசுப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அப்போது, தங்கதமிழ்செல்வன் பேசுகையில்,

மத்திய, மாநில அரசுகளின் துரோக ஊழல் ஆட்சியை முடித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது. டி.டி.வி தினகரன் பெரியகுளம் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தொகுதியிலே தங்கி மக்கள் பணியாற்றினார்.10 ஆண்டுகளுக்கு முன்பு தானும், டிடிவி, ஒபிஎஸ் மூவரும் ஒரே வாகனத்தில் வந்தநிலையில், டிடிவியால் மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக அறிமுகம் செய்யப்பட்ட ஒபிஎஸ், முதலமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளார். ஆனால் தான் அப்படியே இருக்கின்றேன்.

தங்க தமிழ்செல்வன் பரப்புரை

முதல்வர் அளவுக்கு உயர்த்திய குடும்பத்தையே ஒபிஎஸ் குடும்பம் எதிர்க்கின்றது. மக்களிடம் ஊழல் செய்த பணம் ரூ.1 லட்சம் கோடி வரையில் ஓபிஎஸ்-யின் வீட்டில் உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 500, 1000 இல்ல.. 10ஆயிரம், 20ஆயிரம் ஏன் 30ஆயிரம் வரையில் ஓட்டுக்கு தருவதற்கு தயாராக உள்ளனர். பணம் தருபவர்களிடம் பெற்றுக்கொண்டு அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details