திமுக, தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கடந்த நவம்பர் 21ஆம் தேதி தேவாரம் அடுத்துள்ள பொட்டிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ் அரசு அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கட்சிப்பெயர் மறந்து குழப்பத்தில் சொந்தக் கட்சிக்கே சாபமிட்ட தங்க தமிழ்ச்செல்வன்! - திமுக படுதோல்வி
தேனி : வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் எனச் சொல்வதற்கு பதிலாக, திமுக படுதோல்வியைச் சந்திக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் உளறிய காணொலி வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை வெற்றி அடையும். இறுதியாக சொல்கிறேன், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்” எனத் தவறுதலாக தான் அங்கம் வகிக்கும் கட்சியையே குறிப்பிட்டுப் பேசினார்.
தன்னையறியாமல் திமுகவிற்கு சாபமிட்ட தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த உடன்பிறப்புகள், ”அண்ணே... திமுக இல்லை, அதிமுக” என்று சொன்னதும் தனது பேச்சை மாற்றி ”அதிமுக என்று திருத்திக்கொள்ளுங்கள்” என்றார். தற்போது அவரது இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:கரோனாவை பரப்புகிறார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்