தேனி அருகே உள்ள வீரபாண்டியில் இன்று அமமுக, அதிமுகவினர் ஆகிய மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "டிடிவி தினகரன் கட்சியை மக்கள் விரும்பவில்லை. அந்தக் கட்சியைப் பற்றி இங்கு நான் பேசமாட்டேன். செத்த பாம்பை அடிக்க விரும்பவில்லை. தேனி மக்களவைத் தேர்தலில் அதிமுக 550 கோடி செலவு செய்துள்ளது. பணத்தை இறைத்து தன் மகனை வெற்றி பெற வைத்துள்ளார் ஓபிஎஸ்" என்று குற்றஞ்சாட்டினார்.
'அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் எடுப்பேன்..!' - தங்க தமிழ்ச்செல்வன் - தங்கதமிழ்செல்வன்
தேனி: "திமுக ஆட்சிக்கு வந்ததும் காவல்துறையை என்னிடம் கொடுத்தால், தற்போதுள்ள அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து ஊழல் செய்து சேர்த்த கோடிக்கணக்கான பணத்தை மீட்டு தருவேன்" என்று, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்க தமிழ்ச்செல்வன்
மேலும் பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்த பின்பு காவல் துறையை மட்டும் என் வசம் கொடுங்கள். தற்போது அமைச்சர்கள் வீட்டில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக் கொடுக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டுவர முடியும்" என்றார்.