தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் கமிஷன் தர வேண்டாம் - தங்க தமிழ்ச்செல்வன் - நெல் கொள்முதல்

பெரியகுளம் ஜெயமங்களம் பகுதியில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யும் பணியை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று தொடங்கி வைத்தனர்.

thanga tamil selvan
தங்க தமிழ்ச்செல்வன்

By

Published : Jul 26, 2023, 12:24 PM IST

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யும் பணியை துவங்கி வைத்த பின் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேட்டி

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு, கடந்த 20 நாட்களாக அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மேல்மங்கலம் பகுதியில் நெல் அறுவடை செய்யப்படும் நாட்களில் அப்பகுதிகளில் ஆண்டுதோறும் இரண்டு இடங்களில் தமிழ்நாடு அரசு சார்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு திமுக பிரமுகர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைக்கு கமிஷன் வழங்க வேண்டும் என விவசாயிகளிடம் கூறியதாகவும், இதனால் கடந்த மூன்று நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் இருந்து வந்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பினர். அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக நேற்று முன்தினம் (ஜூலை 24) மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் தெரிவித்து நேரடியாக விவசாயிகள் மனு கொடுத்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் தரத்தால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது - சுற்றுலாத்துறை அமைச்சர்

எனவே, கமிஷன் தொகை கேட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தியது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 25) பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஜெயமங்களம் பகுதியில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ”திமுக பிரமுகர் கமிஷன் தொகை கேட்டு நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படாமல் தடுத்ததாக விவசாயிகளின் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் யாருக்கும் பணம் தர வேண்டாம், கொள்முதல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் செலவுகள் அரசே வழங்குவதால் விவசாயிகள் யாரும் எதற்காகவும் பணம் வழங்க வேண்டாம் என தெரிவித்ததோடு, கமிஷன் கேட்டு மூன்று நாட்களாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் இருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

இதையும் படிங்க:புதிய மாதிரி பாடத்திட்டம் 2023 - 2024 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details