தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணத்தை பதுக்குவதற்காக ஓபிஆர் மொரீசியஸ் பயணம் - தங்க தமிழ்செல்வன் தகவல்

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெற்ற பணத்தை பதுக்குவதற்காகத்தான் தேனி எம்.பி. ஓ.பி.ரவிந்திரநாத் சட்டவிரோதமாக தனி விமானம் மூலம் மொரீசியஸ் நாட்டிற்கு சென்றதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

thangatamilselvan
thangatamilselvan

By

Published : Nov 2, 2020, 7:40 PM IST

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறுகையில், கரோனா காலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றோம். ஆனால் தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு இருக்கக்கூடிய ஒரே மக்களவை உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்று ஓராண்டு ஆகியும் தொகுதிபக்கம் அவர் வரவில்லை. கரோனா பேரிடர் காலத்தில்கூட தேனி தொகுதிக்கு எந்தவொரு உதவிகளையும் செய்து தரவில்லை.

ஆனால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக தனி விமானம் மூலம் மொரீசியஸ், மாலத்தீவு நாட்டிற்கு அவர் பயணம் செய்து தற்போது பாரீசில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அவரது இந்த பயணமானது, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு கைமாறிய பணத்தை பதுக்குவதற்காகத்தான் தனி விமானத்தில் சென்றுள்ளார்.

ஓ.பி.ரவிந்திரநாத் மீது தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

அவர் மீது மத்திய, மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் ஊழல் செய்த பணத்தை மாலத்தீவு, மொரீசியஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்குதவதற்காகத்தான் செல்வார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: தங்க தமிழ்செல்வனுக்கு புதிய பொறுப்பு - ஓ. பன்னீர் செல்வத்திற்கு செக் வைக்கிறதா திமுக?

ABOUT THE AUTHOR

...view details