தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள பசுமலைச்சாரலில் அமைந்துள்ளது ஸ்ரீசண்முகநாதன் பால தண்டாயுதபாணி கோயில். இந்தக் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும். அதன்படி இன்று தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதேபோல் உற்சவர் ஸ்ரீசண்முகநாதன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் பவனி வந்தார். அதைத்தொடர்ந்து மாலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், இக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, கோயில் புனரமைப்பு, குடமுழக்கு செய்வதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.