தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாப்பிடும் போது தொண்டையில் பரோட்டா சிக்கி வாலிபர் உயிரிழப்பு - கேரளா மாநிலம்

கேரளாவில் சாப்பிடும் போது தொண்டையில் பரோட்டா சிக்கி பாலாஜி என்ற வாலிபர் உயிரிழந்தார்.

சாப்பிடும் போது தொண்டையில் பரோட்டா சிக்கி வாலிபர் உயிரிழப்பு
சாப்பிடும் போது தொண்டையில் பரோட்டா சிக்கி வாலிபர் உயிரிழப்பு

By

Published : Aug 25, 2022, 1:01 PM IST

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பூப்பாறை சூண்டலைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கட்டப்பனா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு உரம் ஏற்றி கொண்டு வரும் லாரியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார் .

இந்நிலையில் வேலை முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக செல்லும் வழியில், கட்டப்பனாவில் உள்ள ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி வந்து லாரியில் அமர்ந்து சாப்பிட்ட போது பரோட்டா, பாலாஜியின் தொண்டையில் சிக்கியுள்ளது.

இதனால் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் லாரியில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கார் மோதி விபத்து...சிறுவன் பலி

ABOUT THE AUTHOR

...view details