தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சத்யா நகர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணன்(23). இவருக்கும், கோவிந்தநகரம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமிக்கும் இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்ய கண்ணன் கடத்திச் சென்றார். அவரை கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவும் செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது! - சிறுமியை கட்டாய திருமணம் செய்த வலிபருக்கு சிறை
தேனி: சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பிற்கு கிடைத்த தகவலின் பேரில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கண்டமனூர் காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் தங்கசாமி, ராமுத்தாய் மற்றும் உறவினர்களான ஈஸ்வரன், தங்கவேல், அடைக்கலம் ஆகிய 5 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'மின்னல் முரளி' ஷெட்டை சேதப்படுத்திய வழக்கில் நான்கு பேர் கைது!