தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் ( 40). டீ மாஸ்டரான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான மகேந்திரனுடன் கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அருகில் கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவைச் சேர்ந்த முகமது அல்கசிப் (22), கம்பம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த அரவிந்த் (22), மணிகண்டன் (23) ஆகிய மூவரும் டீ மாஸ்டர் மணிகண்டனிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அதற்கு டீ மாஸ்டர் மணிகண்டன் மறுக்கவே, ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து மணிகண்டன், அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கம்பம் வடக்கு காவல்துறையினர், முகமது அல்கசிப், அரவிந்த், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.