தேனி மாவட்டம் ஜெயமங்கலம் பகுதியில் இயங்கி வரும் டாடா காபி தொழிற்சாலை ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வட்டியில்லா கடனுதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாதங்களாக ஆலை நிர்வாகத்தினரிடம் தொழிலாளர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கடந்த 5 நாள்களாக கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் கையிலெடுத்தனர். இதனிடையே தொழிற்சாலை நிர்வாகம் வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்த நேற்று நடவடிக்கை எடுத்தது.
தகவலறிந்த தொழிலாளார்கள் ஆலையின் முன்பாக திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். முன் அனுபவம் இல்லாதவர்களைப் பணியில் அமர்த்தினால் அவர்களின் கவனக் குறைவால் அமோனியம் எனும் விஷவாயு வெளியேறக் கூட வாய்ப்புள்ளது.