தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிப். 21இல் கடையடைப்புப் போராட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

தேனி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 21ஆம் தேதி கடை அடைப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

விக்கிரமராஜா பேட்டி
விக்கிரமராஜா பேட்டி

By

Published : Feb 15, 2021, 9:05 AM IST

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கொடியேற்று விழா, செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜிஎஸ்டியில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி வருகிற 21ஆம் தேதி கடை அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 17ஆம் தேதி நடத்த உள்ளோம்.

வணிகர்களிடம் வசூலிக்கப்படும் வரியானது மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுவதை மாற்றி அமைக்க வேண்டும். ஒரே சீரான வரிவசூல் செய்ய வேண்டும். கடைகளுக்குத் தொழில்வரியாக மூன்றாயிரத்திற்குப் பதிலாக 27 ஆயிரமாக உயர்த்தியிருப்பதை அரசு மறுபரிசீலனைச் செய்திட வேண்டும். 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள வணிகர் நல வாரியத்தை அரசு செயல்படுத்திட வேண்டும்.

புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகள், சாலை விரிவாக்கத்தின்போது வணிகர்களுக்கு ஏற்படுகிற நஷ்டத்திற்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை.

ஜிஎஸ்டி வாயிலாக அரசுக்கு மாதந்தோறும் ரூ.1,20,000 கோடி வரையில் வரியாக வணிகர்கள் செலுத்திவருகிறோம். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையான அழுத்தம் கொடுப்பதற்காக வணிகர்கள் ஒருங்கிணைத்துவருகிறோம்.

கரோனா காலத்தில் உயிரிழந்த 32 வணிகர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் வணிகர்களிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்பட்ட 21 கோடி ரூபாயைத் திரும்ப வழங்க வேண்டும்.

விக்கிரமராஜா பேட்டி

கரோனா ஊரடங்கால் கடைகளுக்கான வாடகையை ஆறு மாதத்திற்குத் தள்ளுபடிசெய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: FASTag இல்லையேல் இருமடங்கு கட்டணம் - நினைவிருக்கட்டும் மக்களே!

ABOUT THE AUTHOR

...view details