தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையரின் ஜாமின் மனு மீதான விசாரணையின்போது சிபிசிஐடி விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

neet-exam-forgery

By

Published : Oct 10, 2019, 10:22 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல், அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவலர்கள் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாணவர் பிரவின், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது.

இதனையடுத்து மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நான்கு பேரும் அடுத்தடுத்த நாட்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து நான்கு பேர் சார்பில் தேனி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சென்னை வழக்கறிஞர் விஜயகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது சிபிசிஐடி சார்பில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஆய்வாளர் சித்ராதேவி நேரில் ஆஜராகாததால், வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் விஜயகுமார் கூறுகையில், ஜாமீன் வழங்கப்படக் கூடாது என்ற நோக்கத்திலேயே சிபிசிஐடி காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய திமுக... எதில் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details