தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் சிலை மணி என்பவர், கடந்த 27.8.2018அன்று நான்கு சக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் சிவன்ராஜ் என்பவரை, வழிமறித்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி சென்றதாகப் போலியாக வழக்குப்பதிவு செய்து ரூ.2,000 அபராதமாக வசூலித்ததோடு, அதற்கு ரூ.100 மட்டும் அபராதம் என ரசீது, கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அவரை அவதூறாகப்பேசியும் அவருடன் காரில் பயணத்த முகம்மது யாசிர் என்பவரையும் மூர்க்கத்தனமாக தாக்கி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் அவதூறாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக, வழக்கறிஞர் சிவன்ராஜ் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.