இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடக்க விழா மாநாடு தேனியில் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, மக்கள் கண்காணிப்பகம், தமிழ் தேச மக்கள் முன்னணி, ஒருங்கிணைந்த மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
மாநாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைகள் உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும், காப்பு காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி ஆதிவாசி மக்களின் வாழ்க்கைக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி, “தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டத் தடையை அரசு விலக்க வேண்டும்.
பெரியார் முதல் ஜெயலலிதா வரை கள் இறக்குமதி தொழிலுக்கு ஆதரவாகவே இருந்தனர். ஆகவே தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.