தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் பூக்களின் பெயர்களால் வரவேற்கும் கேரள-தமிழ்நாடு நெடுஞ்சாலை! - Tamil Flowers

தேனி: கேரள-தமிழ்நாடு நெஞ்சாலையில் அமைந்துள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கு மொழியின் பெருமையை உணர்த்தும் வகையில் தமிழ் பூக்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

TN - Kerala highway

By

Published : Jun 19, 2019, 7:35 PM IST

தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். இம்மாவட்டத்திலிருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு உள்ளிட்ட மூன்று முறை சாலைகள் வழியாக தேக்கடி, மூணாறு, இடுக்கி, சபரிமலை, எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளப் பகுதிகளுக்கு செல்வது சுலபம். நாள்தோறும் இவ்வழியாக நுாற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உள்பட வியாபாரிகளும் தமிழ்நாடு தோட்ட தொழிலாளர்களும் சென்றுவருகின்றனர்.

இவற்றில் ஏராளமானோர் கம்பத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ராமகால் மெட்டு, கட்டப்பணை பகுதிகள் வழியாக உள்ள மலைச்சாலையை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர். இந்த மலைப்பாதையில் ஆபத்தான 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இந்த வளைவுகள் அனைத்திற்கும் தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் வகையில் பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் பண்டைய காலத்தில் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், நெடுஞ்சாலைச் துறையினரால் இன்றும் இந்தப் பெயர்ப்பலகைகள் பராமரிக்கப்பட்டு வருவதால் அந்தப்பகுதி வழியாகச் செல்வோர் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

கேரள-தமிழ்நாடு நெடுஞ்சாலை

குறிஞ்சிப் பூ, முல்லைப் பூ, மருதம் பூ, தும்பைப் பூ, வாகைப் பூ, காந்தள் பூ, மகிழம் பூ, தாழம் பூ, பிச்சிப் பூ, குவளைப் பூ, அனிச்சம் பூ, இருவாட்சிப் பூ, கொன்றைப் பூ, வேங்கைப் பூ, மல்லிகைப் பூ, தாமரைப் பூ என ஒவ்வொரு ஊசி கொண்டை வளைவிற்கும் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதைக் காணும்போது தமிழார்வலர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்கும் மனதிற்குள் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக சூட்டப்பட்ட இந்தப் பூக்களின் பெயர்களை போலவே பல்வேறு பகுதிகளில் தமிழில் சூட்டப்பட்ட பெயர்கள் அழிந்த நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றைக் கண்டறிந்து மீண்டும் புதுப்பித்து தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details