தேனி:போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட தமிழ் இணையவழிக் கல்வி கழகத்தின் சார்பாகவும் ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் இன்று (செப்.2) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினரும் பத்மஸ்ரீ விருது பெற்ற திருநங்கையுமான நர்த்தகி நடராஜ் (Transgender Narthaki Nataraj is a Padma Shri awardee) சிறப்பு விருந்திநராக பங்கேற்று, பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அரசுத்துறை மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்களின் கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.
இதையும் படிங்க:ஐந்து ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்; முடிவுக்கு வந்த பெண்ணின் போராட்டம்!
அதன் பின்னர், 'தென்மேற்குப் பருவக்காற்று தீந்தமிழ் வீச்சும்' என்ற தலைப்பில் தமிழ் மற்றும் தமிழின் பெருமை குறித்தும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே அவர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கேட்ட கேள்விகளுக்கு நர்த்தகி நடராஜ் பதில் அளித்தார். மேலும், தான் கடந்து வந்தபாதையில் தன்னுடைய வளர்ச்சிக்கு தமிழும், தமிழ் மரபும், தமிழ் கலையும்தான் காரணம் என்று அவர் பெருமிதம் கூறினார்.