தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வறண்டு போன சுருளி அருவி -சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தேனி: ஆண்டு முழுவதும் வற்றாத அருவியாக இருந்த சுருளி அருவி மழை பெய்யாததால் வறண்டு காணப்படுகிறது.

suruli

By

Published : Jul 28, 2019, 5:20 PM IST

தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தளங்களில் சிறப்புமிக்கது கம்பம் அருகே உள்ள சுருளி நீர்வீழ்ச்சி. இது சுற்றுலா த:அமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. இதனால் இந்த அருவியில் எல்லா நாட்களிலும் தண்ணீர் விழுந்துகொண்டிருக்கும்.

வறண்டு போன சுருளி அருவி

இந்நிலையில் தூவானம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுருளி அருவிக்கு ஊற்றுப்பகுதிகளில் இருந்து வரக்கூடிய நீர், மழை பெய்யாத காரணத்தினால் ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி தண்ணீரும் குறைந்துள்ளது. இதனால் சுருளி அருவி வறண்டு காணப்படுகிறது எனவே சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details