தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்' - ஆய்வில் பகீர் தகவல்! - குழந்தைகள் நலக்குழு ஆய்வு

தேனி: போதை பழக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் அடிமை ஆவதாக குழந்தைகள் நலக்குழுவினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள்

By

Published : Jul 3, 2019, 7:06 PM IST

தேனி அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சிலர் புகையிலை, சிகரெட் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோட்டூர், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளியின் அருகாமையில் உள்ள பெட்டிக்கடைகளில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள்

அதில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதாக ஒரு சில கடைகள் கண்டறியப்பட்டு, அவற்றில் உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பூதிப்புரம் பகுதியில் நடத்திய ஆய்வில் பள்ளி சீருடையில் உள்ள மாணவர்கள் சிலர் மறைவான இடங்களில் அமர்ந்து புகையிலையில் கஞ்சாவை சேர்த்து அதனை பயன்படுத்துவது தெரியவந்தது.

பூதிப்புரத்தை சேர்ந்த மூதாட்டி பேச்சியம்மாள்(70)

இது தொடர்பாக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், பூதிப்புரத்தை சேர்ந்த பேச்சியம்மாள்(70) என்ற மூதாட்டி போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் மூதாட்டியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details