தேனி: பெரியகுளம் பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பட்டியலினத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்காமல் பள்ளி நிர்வாகம் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனைக் கேட்ட மாணவ, மாணவிகளை சாதி பெயரை சொல்லி பள்ளி ஆசிரியர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.