தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பட்டியல் இன மக்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டுத்தாங்க' - தேனி மாவட்டத்தில் எழுந்த குரல் - ரேஷன் கார்டு

தேனி மாவட்டத்தில் பட்டியல் இன மக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டியல் இன மக்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டுத்தர வேண்டும்...கிராம மக்கள் போராட்டம்
பட்டியல் இன மக்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டுத்தர வேண்டும்...கிராம மக்கள் போராட்டம்

By

Published : Dec 19, 2022, 9:32 PM IST

பட்டியல் இன மக்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டுத்தர வேண்டும்...கிராம மக்கள் போராட்டம்

தேனி: கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியில் அரசு பள்ளி தெருவில் வசிக்கும் மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர். அவர்கள், பட்டியல் இன மக்களுக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவித்தனர். உரிய ஆவணப்படி தங்களது சமுதாயத்திற்குச் சொந்தமான இடத்தை அளவீடு செய்து முறைப்படி, தங்கள் சமுதாயத்தினருக்கு வழங்கிட வேண்டும் என தாசில்தார் மற்றும் கோட்டாட்சியரிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

மனு அளித்து பல மாதங்களாகியும் நில அளவீடு செய்து வழங்குவது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வருவாய்த் துறையினர் காலம் தாழ்த்தி வருவதாகப் புகார் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து விட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக வாசலில் அமர்ந்து குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.

தகவல் அறிந்து உத்தமபாளையம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:CCTV Footage: பைக்கை லாவகமாக திருடிச் செல்லும் நபர்!

ABOUT THE AUTHOR

...view details