தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜமீன்தார் காம்ப்ளக்சில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் இன்று காலை ஏ.டி.எம் அறையில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதில் அறையில் இருந்த இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் முழுவதும் தீப்பற்றி எரிந்தன.
இந்த சம்பவம் குறித்து தேனி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் ஏ.டி.எம் இயந்திரம் முழுவதுமாக எரிந்து நாசமானது.