தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்டது கொட்டக்குடி ஊராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர்கள்.
இப்பகுதியில் முறையான சாலை வசதிகள் இல்லை. போடியில் இருந்து குரங்கனி வரை மட்டுமே பேருந்துகள் வந்து செல்கின்றன. குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரையுள்ள 13 கி.மீ அடந்த வனப்பகுதியாகும். எனவே சாலை அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. பொதுமக்கள் தினமும் அவ்வழியாக நடந்தே சென்று வருகின்றனர்.
சரியான சாலை வசதி இல்லாததால், இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கேரளாவிற்கு சென்று அங்கிருந்து மூணார் வழியாக டாப் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். இதனால் 102 கி.மீ தூரம் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.