தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டின் 51ஆவது புலிகள் காப்பகம் உருவானது! - srivilliputhur megamalai tiger reserve launched

தேனி: 51ஆவது புலிகள் காப்பகமாகவும், தமிழ்நாட்டில் 5ஆவது புலிகள் காப்பகமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் பிப்ரவரி 8இல் உதயமானது.

நாட்டின் 51ஆவது புலிகள் காப்பகம் உருவானது
நாட்டின் 51ஆவது புலிகள் காப்பகம் உருவானது

By

Published : Feb 9, 2021, 9:46 AM IST

விரைவில் இதற்கான நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்படவுள்ளனர். புலிகள் காப்பகமாக மேகமலை வன உயிரின சரணாலயம் தரம் உயர்த்தப்பட்டதை வரவேற்று பெரியகுளம் அருகேயுள்ள விழுதுகள் இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மேலும் தாமரைக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டும், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரவு உணவு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கேக் வெட்டி கொண்டாடும் விழுதுகள் இளைஞர் பெருமன்றத்தினர்

வைகையின் பிறப்பிடமாக உள்ள மேகமலை வன உயரின சரணலாயம் புலிகள் காப்பகமாகத் தரம் உயர்த்தப்பட்டதால் வனச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வன உயரினங்களின் வாழ்வு பாதுகாக்கப்படும். இதனால் வனவளம் மேம்படுவதோடு மட்டுமல்லாது, வற்றாத நதியாக வைகை உருவாகக்கூடும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details