தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடைபயிற்சி சென்றவர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி செயின் பறிப்பு - chili powder

தேனி: நடைபயிற்சி சென்ற மூதாட்டியின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி தங்கச் செயின் பறித்த சம்பவத்தை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பு
மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பு

By

Published : Jan 8, 2021, 4:45 PM IST

தேனியில் நடைபயிற்சி சென்ற 80 வயது மூதாட்டியின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி எட்டு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்த இரண்டு இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் அருகில் உள்ள முல்லை நகர் ஹவுசிங் போர்டு காலனியில் வசித்துவருபவர் லட்சுமி (80). இவர் வழக்கம்போல நேற்று (ஜன. 07) மாலை தனது வீட்டருகே உள்ள டாக்டர் காலனி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு இளைஞர்கள் (சுமார் 20 முதல் 30 வயதுடைய) மூதாட்டியின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளனர்.

மிளகாய்ப் பொடி தூவி செயின் பறிப்பு


இதில் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தவுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த எட்டு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இது குறித்து மூதாட்டி லட்சுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோயிலுக்குள் பெண்ணுக்கு நடந்த கொடூரம் - இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details