தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தேனி நேரு சிலையில் இருந்து 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு 14 கி.மீ தூரமும், லட்சுமிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து பள்ளி வரையில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு5 கி.மீ., தூரமும் மாரத்தான் நடைபெற்றது.
இதில் 14 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சிவகாசியைச் சேர்ந்த குணாளன், வேல்முருகன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில் நீலாம்பரி, சந்தியா ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேனியைச் சேர்ந்த பிரீத்தி, ஷாருக் ஆகிய இருவர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கைலாசபட்டி அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், தடகள வீராங்கனை தங்க மங்கை கோமதி மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு ரூ.10 ஆயிரமும், 5 ஆயிரத்திற்கான காசோலையையும் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், 'தடகள விளையாட்டு உள்பட அனைத்து விதமான விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தாம் தயார். உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்கள் பெரியகுளத்தில் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை அணுகலாம்' என்றார்.
'விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யத் தயார்' - ஓ.பி. ரவீந்திரநாத் குமார் இந்தப் போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
இதையும் படியுங்க: அதிமுக புறக்கணிப்பு - தேனியில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு