தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்ணகி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம்! - கண்ணகி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம்

மங்கலதேவி கண்ணகி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டியும், கோயிலுக்கு செல்லும் பாதையை சீராக அமைத்துத்தர வேண்டியும் யாக பூஜை நடைபெற்றது.

கண்ணகி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம்
கண்ணகி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம்

By

Published : Aug 10, 2022, 6:45 PM IST

தேனி: மங்கலதேவி கண்ணகி கோயில் தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் தமிழ்நாட்டின் கூடலூரில் உள்ள பளியங்குடி என்ற பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெறும். அன்று தமிழ்நாடு மற்றும் கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு மங்கலதேவி கண்ணகியை தரிசித்துச்செல்வார்கள். மேலும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இதனால் மங்கலதேவி கண்ணகி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்றும், அந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்றும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

தேனி சந்தை மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் 'யாக குண்டங்கள்' அமைக்கப்பட்டு புனித கலச நீருக்கு பூஜை செய்யப்பட்டு நெய் போன்ற விசேஷப்பொருட்கள் கொண்டு சிறப்பாக பூஜை நடைபெற்றது. இந்த யாக பூஜைகளில் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கண்ணகி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம்!

இதையும் படிங்க:முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிப்பு; கூடுதலாக நீர் வெளியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details