அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரும், அமமுக கொள்கைப் பரப்பு செயலாளருமான தங்கதமிழ் செல்வன் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் ஈடிவி பாரத்துக்கு அவர் சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துதல், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைளுக்கு முன்னுரிமை அளிக்க இருகிறேன்.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கப்படுவதற்கான வழிவகை செய்யப்படும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் தேனி தொகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து தரப்படும். தற்போது நடக்ககூடிய மக்களவை தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம் ஆகும்.
இதற்கு முன்னர் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு கூட தொகுதிப் பக்கம் வராதவர்கள். தொகுதியின் வளர்ச்சி நிதியை சரியாக மக்களுக்கு செலவழித்தார்களா என்றும் தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினராக தான் இருந்த காலகட்டத்தில் வளர்ச்சி நிதியை மக்கள் பயன்பாட்டிற்கு செலவழித்துள்ளேன்.
தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக முல்லை பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அவ்வப்போது வந்து செல்பவர்கள் நாங்கள் இல்லை, தொடர்ந்து மக்கள் சேவை செய்து வருவதால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ் செல்வன் தேனியில் சிறப்பு பேட்டி