தேனி: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் 117 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக 4 அடி உயர்ந்து இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 125.62 படியாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர துவங்கிய நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது அணைக்கு வரும் 107 கனஅடி நீரும் அப்படியே வராக நதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.