தேனி: மார்க்கையன் கோட்டை பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமியைக் காதலிக்க வலியுறுத்தி சிறுமியை கத்தியால் குத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதுசெய்யப்பட்டார்.
இவர் மீது பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் கடந்த 20ஆம் தேதி அடைத்தனர். இந்நிலையில், சிறையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என மனோஜ் காவல்துறை அலுவலர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் மனோஜை அழைத்துக்கொண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.