தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மோதி விபத்து...சிறுவன் பலி - கார் மோதி விபத்து

உத்தமபாளையம் அருகே சபரிமலைக்கு சென்று வந்த வாகனம் மோதி, சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் மோதி விபத்து
கார் மோதி விபத்து

By

Published : Aug 22, 2022, 2:12 PM IST

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் உள்ள கோவிந்தன் பட்டி பஸ் நிறுத்தத்தில் சின்னமனூரைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் குடும்பத்தினருடன் உறவினரின் இல்ல விழாவிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரது மகன் ஜோன்ஸ்லி(8) பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த போது சிவகங்கை மாவட்டத்திலிருந்து சபரிமலை கோயிலுக்கு சென்றுவிட்டு தேனி நோக்கி வந்து கொண்டிருந்த கார், எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உத்தம பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த உத்தமபாளையம் காவல்துறையினர் பக்தர்களின் வாகனத்தை ஓட்டி வந்த ரகுராமன்(37) என்பவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரித்த வழக்கு.... சிறுமி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details