தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு மணல், எம் சாண்ட் மணல் அதிகளவில் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கனிம வளத்துறை இணை இயக்குனர் விஜய்குமாரன் தலைமையில், ஆர்.ஐ. கண்ணன், மதுரை மண்டல பறக்கும்படை அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை லோயர்கேம்ப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 7 லாரிகளில், கேரளா கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள எம் சாண்ட் மணல் மற்றும் அனுமதியை விட அளவுக்கு அதிகமான ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து லாரிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.