தேனி: தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான குமுளியில் சோதனைச்சாவடி வழியாக யானைத்தந்தங்களை கடத்தி வந்து சிலர் யானை தந்தம் விற்க முயல்வதாக, மதுரை வனத்துறை விஜிலென்ஸ் குழுவிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தவலைத்தொடர்ந்து தமிழ்நாடு எல்லையான குமுளி காப்புக்காடு எல்லைப்பகுதியில் வனத் துறையினர் தீவிரமாக வாகான சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் (62) மற்றும் வெள்ளையன் (63) ஆகியோரை பரிசோதனை செய்தபோது இருவரும் 4 கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்களை விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியைச்சேர்ந்த மேத்யூ (53),ஜோன்சன் (51), நிதின் (30), அசோகன் (50), அப்துல்அஜீஸ் (34) ஆகிய ஏழு பேரையும் கைது செய்து மேலும் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்று தலைமறைவானவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
யானை தந்தம் கடத்திய ஏழு கேரள மாநிலத்தவர்கள் கைது! இதனையடுத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை உத்தமபாளையம் சிறையில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இந்தச்சம்பவம் தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதையும் படிங்க:கேரளாவில் தர்மபுரி பெண் நரபலி: தாயின் உடலை மீட்க கோரி மகன் கோரிக்கை