தேனி மாவட்டத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு வனவேங்கைகள் கட்சி சார்பில் பழங்குடிகள் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கல் தோன்றி, மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி குறவர் இனம். இதனை நரிக்குறவர் இனத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு எனக் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவிலிருந்து வந்த சரபோஜி மன்னருடன் வந்தவர்கள்தான் தற்போதைய நரிக்குறவர் இனத்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
ஊசி, பாசி மணி விற்பவர்களை, பூனை, நரி பிடித்துக் கொண்டு இருந்தவர்களை நரிக்குறவர் என்ற பட்டியலில் இணைத்து நாசம் செய்தது திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள்தான் என கடுமையாக தாக்கிப் பேசினார். இவர்களையும் (திராவிட கட்சிகள்) அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.