தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ராஜேஷ்(21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று கடத்தி சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது. - Schoolgirl abducted and sexually harassed
தேனி: ஆண்டிபட்டி அருகே 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:உபி.,யில் தொடரும் அவலம்: 5 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது