தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி திறந்த முதல் நாளே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாணவர்கள்! - school opening

தேனி மாவட்டத்தில் போக்குவரத்து வசதி கேட்டு, பள்ளிகள் திறந்த முதல் நாளே மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்த சம்பவம் நடந்துள்ளது.

பள்ளி திறந்த முதல் நாளே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பள்ளி மாணவர்கள்!
பள்ளி திறந்த முதல் நாளே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பள்ளி மாணவர்கள்!

By

Published : Jun 13, 2022, 9:56 PM IST

தேனிமாவட்டம், போடிநாயக்கனூர் அருகிலுள்ள சிறைக்காடு பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தினந்தோறும் ஆட்டோ மூலமாக பள்ளிக்குச்சென்று வந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறந்து உள்ள நிலையில் இன்று இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆட்டோவை எதிர்பார்த்து காத்திருந்தனர். இச்சூழலில் பள்ளி நிர்வாகம் ஆட்டோவை ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டது. இதனால் முதல் நாள் பள்ளிக்குச்செல்ல முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கு பள்ளி நேரத்தில் பள்ளிக்குச்செல்ல பேருந்து வசதியை ஏற்பாடு செய்து தரக்கோரி மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இவர்களைப் பார்த்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக போக்குவரத்துத்துறை அலுவலரைத்தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதியை ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டார்.

பள்ளி திறந்த முதல் நாளே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பள்ளி மாணவர்கள்!

மேலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேனாவை பரிசளித்து பள்ளிக்குச்செல்ல பேருந்து வசதி செய்து தருவதாக உறுதியளித்தார்.

இதையும் படிங்க:தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம்: பொள்ளாச்சிக்கு பெருமை சேர்த்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details