தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கெங்குவார்பட்டி பேரூராட்சி. இப்பகுதியில் தூய்மை இந்தியா திட்ட மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண்கள், 3 ஆண்டுகளாக துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெண்டரில் முறைகேடு - துப்புரவு பணியாளர்கள் சமையல் பாத்திரங்களுடன் தர்ணா - sanitary workers
தேனி: பெரியகுளம் அருகேயுள்ள பேரூராட்சியின் முறைகேடான நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் சமையல் பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் சுகாதாரப் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தும் முறையாக டெண்டர் விடப்பட்டு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தாண்டிற்கான டெண்டரை பேரூராட்சி நிர்வாகம் முறையாக நடத்தவில்லை என்று கூறி துப்புரவு தொழிலாளர்கள் இன்று சமையல் பாத்திரங்களுடன் கெங்குவார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், டென்டர் தொடர்பான எந்தவொரு முன் அறிவிப்பு விடாமலும், டென்டர் ஒப்பந்தத்தை அறிவிப்பு பதாகையில் ஒட்டாமலும், பேரூராட்சி அலுவலத்தில் பணியாற்றும் சிலர் அவர்களுக்கு தேவையானவர்களுக்கு டென்டர் வழங்கியுள்ளனர். தற்போது டென்டர் எடுத்தவர்கள் 3 ஆண்டுகளாக பணி செய்துவரும் எங்களுக்குரிய ஊதியத்தை வழங்க முன் வரமாட்டார்கள். எனவே முறையாக நடைபெறாத இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்திட வேண்டும் என்றனர்.