தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி வழியாக தேனி வந்தடைந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் பீதி அதிகம் இருப்பதால் அங்கிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளுக்கு எல்லைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கேரளாவிலிருந்து தேனி வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் இன்று ஈடுபட்டனர்.