தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு ரூபாய்க்கு சிகையலங்காரம்: குஷியான வாடிக்கையாளர்கள்! - தேனியில் ஒரு ரூபாய்க்கு சிகையலங்காரம்

தேனி: ஆண்களுக்கான சிகையலங்காரம், பெண்களுக்கான திரெட்டிங் (புருவம் திருத்துதல்) ஒரு ரூபாய்க்கு செய்யப்படும் என்ற அழகு நிலையத்தின் அறிவிப்பால், வாடிக்கையாளர்கள் அழகு நிலையம் நோக்கி படையெடுத்தனர்.

one rupee saloon offered hair cut
ஒரு ரூபாய்க்கு சிகையலங்காரம்

By

Published : Mar 12, 2020, 9:37 AM IST

Updated : Mar 12, 2020, 9:44 AM IST

தேனி பாரஸ்ட்ரோடு 7வது தெருவில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலருக்குமான அழகு நிலையத்தை நாகேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். தேனி மாவட்டத்தில் 5 கிளைகளுடன் இயங்கிவரும் இந்த அழகு நிலையம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக நேற்று (11.03. 2020) ஒரு நாள் மட்டும் ஆண்களுக்கான சிகை அலங்காரம், பெண்களுக்கான திரெட்டிங் (புருவம் திருத்துதல்) ஆகியவற்றிற்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவித்தார்.

இந்த சலுகை கட்டண அறிவிப்பால் காலை 6மணிக்கு திறக்கப்பட்ட அழகு நிலையத்திற்கு ஆண்கள் பெண்கள் என அனைவரும் தொடர்ந்து படையெடுத்து வந்தனர். இங்கு பணிபுரியும் பணியாளர்களும் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றினர். இதற்கு முன்பே மெம்பர்ஷிப் கார்டு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி குறைவான செலவில் சிகை அலங்காரம் செய்து வந்த நிலையில், இந்த ஒரு ரூபாய் அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் சந்தோஷம் அடையச் செய்தது.

ஒரு ரூபாய்க்கு சிகையலங்காரம்
ஒரு ரூபாய்க்கு சிகையலங்காரம்

இன்றைய காலகட்டத்தில் சிகை அலங்காரம் செய்வதற்கு குறைந்தபட்சம் 120 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படும் நிலையில், இந்த ஒரு ரூபாய் அறிவிப்பிற்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேனி பகுதியில் ஏராளமானோர் சிகை அலங்காரம், திரெட்டிங் செய்து கொண்டு பயனடைந்தனர்.

Last Updated : Mar 12, 2020, 9:44 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details