ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனையடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் தீவிர வாக்கு சேகரிப்பு - எஸ்.ஆர். பார்த்திபன்
சேலம்: கன்னங்குறிச்சி பகுதியில் சேலம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள எஸ். ஆர். பார்த்திபன், இன்று சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
இவர் கன்னங்குறிச்சி, சின்ன கொல்லப்பட்டி, கோரிமேடு ஆகிய பகுதிகளில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சேலம் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.