கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது, சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை காலங்களில் அனைத்து தினங்களும் சந்நிதி திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். இதனை முன்னிட்டு ஐயப்பனை தரிசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பொதுவாக சபரிமலை செல்வதற்கு பெரும்பாலான பக்தர்கள் தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கம்பம் மெட்டு பாதை வழியாக சபரிமலை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்கர் பரிஷத் வழக்கு: பாஜகவுக்கு அடுத்த செக்... அதிரவைக்கும் சரத் பவார்!
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு மண்டல பூஜைத் தொடங்கி நடைபெற்று வருவதால், வெளியூர் பக்தர்கள் கம்பம் மெட்டு - ஒரு வழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு, ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முண்டக்காயம், எரிமேலி, பம்பை வழியாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தில் முதல்வரின் முடிவே அதிமுகவின் முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்!
இதேபோல், பம்பையிலிருந்து ஊர் திரும்பும் பக்தர்கள் குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பன்ஆறு, வண்டிப்பெரியாறு, குமுளி, கம்பம் வழியாகச் செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட போக்குவரத்து வழித்தட மாற்றத்தை ஒழுங்குப்படுத்தும் பொருட்டு பக்தர்களின் வாகனங்களுக்கு வழித்தடத்தை அறிவதற்கும், தகவல் தெரிவிப்பதற்காகவும் முக்கியமான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவல் துறையினர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
.