தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிய சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்!

தேனி: கார்த்திகை முதல் நாளில் சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிவதற்கு புனித ஸ்தலமான சுருளி அருவியில் பக்தர்கள் குவிந்தனர்.

அய்யப்பனுக்கு மாலை அணிவதற்கு சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்

By

Published : Nov 17, 2019, 11:23 PM IST

சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை தமிழ் மாதம் கார்த்திகை 1ஆம் தேதி முதல் 41 நாட்கள் ஒரு மண்டலமாக கொண்டு மண்டல பூஜை நடைபறும். இதனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பனின் சன்னிதானம் செல்வதற்காக கார்த்திகை மாதப் பிறப்பான இன்று மாலையிடுவதற்காக தேனி மாவட்ட பக்தர்கள் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஏராளமானோர் குவிந்தனர்.

அய்யப்பனுக்கு மாலை அணிவதற்கு சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்

இந்த அருவியானது முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த புனிதஸ்தலமாகக் கருதப்படுகிறது. அதிகாலையில் இருந்தே சிறுவர் முதல் பெரியவர் வரை உள்ள பக்தர்கள் அருவியில் புனித நீராடி கருப்பு, காவி உடை அனிந்து துளசி மாலை, சந்தன மாலைகளுடன் இங்குள்ள விநாயகர் கோயிலில் குருசாமிகள் கைகளால் சரணகோசம் முழங்க மாலை அனிந்து விரதத்தை தொடங்கினர்.

முன்னதாக சுருளிமலையில் உள்ள ஸ்ரீ அய்யப்பசாமி கோயில் உற்சவரை பக்தர்கள் கோயிலிலிருந்து பல்லக்கில் சுருளி அருவிக்கு சுமந்து சென்று புனித நீரில் ஆறாட்டு வழிபட்டனர்.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தவருக்கு அபராதம் விதித்த ரயில்வே அலுவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details