தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஏடிம் மையத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
காவலாளி அற்றஇந்த ஏடிஎம் மையத்தில்,நேற்று இரவு (ஜூன் 17) அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து, இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதலில், கண்காணிப்புக் கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு, தொடர்ந்து இயந்திரத்தின் முதல் நிலை கதவை உடைத்துள்ளனர்.
பின்னர் பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க அவர்கள் முற்பட்ட நிலையில், அதனைத் திறக்க முடியாத நிலையில் பெரும் கொள்ளை தவிர்க்கப்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தின் முன் திரையை மட்டும் உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.