தேனி மாவட்டத்தில், கேரள எல்லையோரம் அமைந்துள்ள மலைக்கிராமங்களான டாப் ஸ்டேஷன், போடிமெட்டுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் ஜீப் மூலம் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும். குறிப்பாக, டாப் ஸ்டேஷன் மலை கிராமத்திற்கு கேரள மாநிலம் மூணாறு வழியாகத்தான் பொருள்கள் கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், கரோனா வைரஸ் காரணமாக, இரண்டு மாநில எல்லைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருள்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில், கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக்கிராம மக்களுக்கான அத்தியாவசிய உதவி பொருள்கள், காய்கறிகள், மளிகை உள்ளிட்டவற்றை வாகனத்தில் ஏற்றி சென்ற வருவாய் துறையினர் போடிமெட்டு சோதனைச்சாவடியை கடக்க முயன்றனர்.