தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவில் நடைபெற்றுவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் உத்தரவின்பேரில் காவல் துறையினர் பெரியகுளம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த தென்கரையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில் அவர் மறைத்துவைத்திருந்த தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.