தேனிக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘27 வருடங்களுக்கு மேலாக அயோத்தி வழக்கு ஒரு விவாதப் பொருளாக மாறியது.13ஆம் தேதிக்கு முன்னதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பு குறித்து இந்திய மக்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை ஒருமித்து வழங்கியுள்ளார்கள். இந்த தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
‘மதம், தெய்வத்தின் பெயரில் இனி ஒரு சொட்டு ரத்தம் சிந்தக்கூடாது’ - தா. பாண்டியன் - Communist senior Leader dha. pandian byte
தேனி: மதம், தெய்வத்தின் பெயரில் இந்தியாவில் இனி ஒரு சொட்டு ரத்தம் சிந்தக் கூடாது என்றும், அயோத்தி தீர்ப்பை இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தா. பாண்டியன் பேட்டி
அனைவரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பு குறித்து எந்த ஒரு விமர்சனமும் வைக்கக் கூடாது. மதத்தின் பெயரில் இந்தியாவில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக்கூடாது’ என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி 2: 'இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை'யான வெள்ளைக்கார துரையின் கதை!