தேனி:ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணையில் இருந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பாசனப்பகுதி நிலங்களுக்காக நீர் திறக்கப்பட்டது.
பெரியார் பாசனப்பகுதியில் உள்ள ஒருபோக பாசன நிலங்களான 85,563 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின்கீழ் உள்ள ஒரு போக பாசன பரப்பளவாகிய 19,439 ஏக்கர் நிலங்களுக்கு என மொத்தமாக 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1130 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பாசனத்திற்காக நீர் திறப்பு நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பாசனத்திற்கான நீரைத் திறந்து வைத்து மலர்த்தூவி மரியாதை செய்தார். மேலும் இந்த நீர் திறப்பு நிகழ்ச்சியில் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
வைகை அணையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரானது ஆயிரத்து 130 கன அடி வீதம் 45 நாட்களுக்கும் பின்னர் உள்ள 75 நாட்களுக்கு முறைப்பாசனம் மூலம் மொத்தம் 120 நாட்களுக்கு நீர் திறக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டு, பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு இதனால் வைகை அணை கரையோரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வைகை ஆறு செல்லும் வழியில் வசிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மற்றும் திருமங்கலம் பகுதியில் ஒரு போக பாசன நிலங்களான 1,05,002 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 1,130 கனஅடி நீரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க:17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு