தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

வைகை அணையிலிருந்து விநாடிக்கு 4,300 கன அடி நீர் திறக்கப்பட்டது. தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அலுவலர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளனர்.

வைகை அணையிலிருந்து 4,300 கன அடி நீர் திறப்பு... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையிலிருந்து 4,300 கன அடி நீர் திறப்பு... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By

Published : Aug 31, 2022, 5:16 PM IST

தேனி:தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீர்பிடிப்புப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 2,578 கன அடியாக அதிகரித்து, அணையின் உயரம் 70 அடியை எட்டியுள்ளது.

இதன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து விநாடிக்கு 4,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்குச்செல்லுமாறு அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:பழனி சண்முகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details