தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த மூதாட்டி - உடலை மருத்துவமனை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டம்! - கரோனா பலி

தேனி: கரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்பாக சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Relatives struggle to keep the body of an elderly woman who died of corona in front of the hospital
Relatives struggle to keep the body of an elderly woman who died of corona in front of the hospital

By

Published : Aug 8, 2020, 4:50 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேவுள்ள நல்லகருப்பன்பட்டியைச் சேர்ந்த 62வயது மூதாட்டி ஒருவர், உடல் நலக்குறைவால் கடந்த மூன்று தினங்களுக்கு முன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனிடையே சிகிச்சையிலிருந்த மூதாட்டிக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறி சடலத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் அடக்கம் செய்வதற்கு சுகாதாரத்துறையினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடலை தாங்களாகவே தகனம் செய்து கொள்வதாகக் கூறி சடலத்தைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள், திடீரென மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் கரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை வைத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகையில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காமல், பயிற்சி மருத்துவ மாணவர்களையே பயன்படுத்துகின்றனர். மேலும் இறந்தவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதை முன் கூட்டியே உறவினர்களுக்கு தெரியபடுத்தவில்லை. சிகிச்சையும் உரிய முறையில் செய்யாததாலே மூதாட்டி உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானா விலக்கு காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இது தொடர்பாக முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து, மறியலை கைவிட்டு சடலத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details